இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய பொக்கிஷம்!
எஹெலியகொட, கெட்டஹெத்த பிரதேசத்தில் இரத்தினக் கல் குவியல்கள் பொக்கிஷமாக கிடைத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த இரத்தினகற்கள் அரச காணிகளுக்கு கீழ் அமைந்துள்ளது. அந்த காணிகளில் பயிர்செய்கை செய்வதற்கு விற்பனை அல்லது குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அந்த காணிகளில் இருக்கும் இரத்தினகற்களுக்கு உரிமைக்கோர முடியாது.
இந்த இரத்தினக்கல் பொக்கிஷத்தை முழுமையாக அகழ்வு செய்ய வேண்டும். அதற்கான செலவினை இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபை மற்றும் தனியார் பிரிவு இணைந்து ஏற்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments