400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!
உக்ரைன் மற்றும் கஜகஸ்தானிலிருந்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடைந்தன.
குறித்த இரண்டு விமானங்களும் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளன.
கஜகஸ்தானிலிருந்து 235 சுற்றுலாப் பயணிகளுடனான விமானமும் 179 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட விமானம் உக்ரைனில் இருந்தும் வருகைத் தந்துள்ளன.
உக்ரைனிலிருந்து இலங்கைக்கு வரும் எட்டாவது சுற்றுலாப் பயணிகள் குழு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று நோயால் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் 10மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ஜனவரி 21ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்பதுடன், சிறப்பு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments