Header Ads

இல்து-பிரான்சின் கொரோனாத் தொற்று விகிதம்

 



பிரான்சில் 456 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 57 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 13.377 ஆக உயர்ந்துள்ளது.

 
இங்கு 5.342 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தீவிரசிகிச்சைப் பிரிவில் 680 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 57% ஆகும்.
 
100.000 பேரிற்கான கொரோனாத் தொற்று விகிதம் ( taux d'incidence) இல்-து-பிரான்சில் 221 ஆக உள்ளது. (200 இற்கு மேல் ஆபத்தான நிலைமையாகும்).
 
 
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
 
    Paris - வைத்தியசாலையில்  837 பேர் -   2.916 பேர் சாவு  (+6)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில்  756 பேர் - 1.635 பேர் சாவு (+1) 
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் 601 பேர் - 2.018 பேர் சாவு (+6) 
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் 884 பேர் -  1.797பேர் சாவு (+12) 
    Les Yvelines- வைத்தியசாலையில்  630 பேர் - 1.226 பேர் சாவு (+16)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில்  476 பேர் - 1.316 பேர் சாவு (+7)
    L'Essonne- வைத்தியசாலையில்  729 -  1.184 பேர் சாவு (+6)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில்  429 பேர் -  1.325 பேர் சாவு (+3)

No comments

Powered by Blogger.