இலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி!
இலங்கையில் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க எரிவாயு நிறுவனம் ஒன்று விடுத்திருந்த கோரிக்கையை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை 1,493 ரூபாலிருந்து 1,900 ரூபாவாக அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், விலைகள் தொடர்பான விபரங்களை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments