நாளை புதிய அறிவிப்புக்கள் வருமா ?
இன்று புதன்கிமை காலை எலிசே மாளிகையில் இடம்பெற்றிருந்த வள அறிஞர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தினைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ் ஊடக சந்திப்பொன்றினை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு இடம்பெற இருக்கின்ற இந்தசந்திப்பில் கூடவே வழமைபோல் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது பொதுமுடக்கம் ஒன்று அறிவிக்கப்படலாம் என கடந்த வாரம் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மேலதிகமான புதிய கட்டுப்பாடுகள் பிரதமரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளைய ஊடக சந்திப்பு எத்தகைய அறிவிப்புக்களை கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
குறிப்பாக இன்னும் சில நாட்களில் பாடசாலை விடுமுறை வரவிருக்கின்ற நிலையில், விடுமுறைக்கால கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரதமரின் கரிசனை இருக்கும் என தெரவிக்கப்படுகின்றது.
முழுமையான பொதுமுடக்கத்துக்குள் நாடு செல்வதனை அதிபர் எமானுவல் மக்ரோன் அவர்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுவதோடு, இறுக்கமான கட்டுப்பாடுகள் ஊடாக வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் முயல்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் நாளுக்கு கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரித்துச் செல்வதும் மருத்துவமனை வட்டாரங்களில் கவலைகளை தோற்றுவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
No comments