Header Ads

முக்கிய செய்தி : கொரோனாத் தடுப்பு ஊசித் தயாரிப்பில் பிரான்ஸ் - ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்!!

 


அமெரிக்காவின் Pfizer/BioNTech மற்றும்  Moderna கொரோனாத் தடுப்பு ஊசிகளின் விநியோகம் பெருமளவில் தடைப்பட்டுள்ள நிலையில், அவற்றை பிரான்சின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
நேற்று திடீரென, முன்னரே திட்டமிடாமல் TF1 தொலைக்காட்சியில் தோன்றிய பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் இந்தத் தகவலையும் தெரிவித்துள்ளார்.
 
 ஜனாதிபதியின் உரை, கொரொனாத் தடுப்பு ஊசி தொடர்பானதாகவே இருந்தது.
 
அனுமதியும் தயார்ப்படுத்தல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், Pfizer/BioNTech தடுப்பு ஊசியை Delpharm நிறுவனமும்  Moderna வினை Recipharm நிறுவனமும் தாயரிக்க உள்ளன.
 
இவற்றுடன் Sanofi மருந்து ஆய்வகமும், Fareva நிறுவனமும் கூட கொரோனத் தடுப்பு ஊசிகளைத் தயாரிக்க உள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.