Header Ads

கடுமையான உள்ளிருப்பிற்கு பிரெஞ்சு மக்கள் ஆதரவு- கருத்துக் கணிப்பு!!

 "கடந்த வாரமே ஏன் உள்ளிருப்பு அறிவிக்கப்படவில்லை, இதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்" எனப் பிரெஞ்சு மக்கள் தெரிவித்துள்ளதாக ஒரு கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.

 
 
Elabe நிறுவனம் BFMTV ஊடகத்திற்காக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் பெரும்பான்மை மக்கள் மிகக் கடுமையான உள்ளிருப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
கடந்த வாரத்தை விட, கடுமையான உள்ளிருப்பிற்கான ஆதரவு, தற்போது,ஏழு புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
25 முதல் 34 வயதுள்ளவர்களில் 58சதவீதமும், இடைநிலை தொழில் புரிவோர்களில் 64 சதவீதமும், கிராம நகர மக்களில் 57 சதவீதமும், மரின் லூப்பனின் வாக்காளர்களில் 58 சதவீதமும், கடுமையான உள்ளிருப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளதாகவும், இந்தக் கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.
 

No comments

Powered by Blogger.