Header Ads

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை


 உலகில் சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது.

இந்நிலையில் பிரித்தானியா மற்றும் தென் ஆபிரிக்காவில் உரு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.

இதனால் ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவில் மூன்றாவது முறையாக முழு ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

உருமாறிய கொரோனா அதிக வீரியம் மிக்கதாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும் பலன் அற்று காணப்படலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே அந்நோயின் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களை எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்க கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்துகளை செலுத்தி ஆய்வு செய்த போது உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.