Header Ads

பரிசில் காவல்துறையினர் அதிரடி சுற்றி வளைப்பு !!!

 


இன்று வெள்ளிக்கிழமை பரிசில் காவல்துறையினர் அதிரடி சுற்றி வளைப்பு ஒன்றை மேற்கொண்டனர். 

 
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தின் Boulevard Bessières பகுதி அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  rue Frédéric-Brunet வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் ஆயுததாரி ஒருவர் நுழைந்ததை அடுத்து காலை 9 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். 
 
La Brigade de recherches et d’intervention அதிகாரிகள் குறித்த பகுதியை சுற்றி வளைத்தனர். 
 
17 ஆம் வட்டார நகர முதல்வர்  Geoffroy Boulard இத்தகவலை உறுதி செய்தார். *ஆயுததாரி தேடப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. ஆயுததாரி பெண் ஒருவரின் வீடு ஒன்றுக்குள் நுழைத்ததாக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன. 
 

No comments

Powered by Blogger.