Header Ads

பி.பி.சி. உலக செய்திச் சேவைக்கு தடை விதித்த நாடு

 


பிரிட்டிஷ் தொலைக்காட்சி அலைவரிசையான பிபிசி உலக செய்திச் சேவைக்கு சீனாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை இதனை கூறியுள்ளது.

தடை குறித்து சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவிக்கையில்,

செய்திகள் உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்”, “சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

எனவே இந்த அலைவரிசை சீனாவில் ஒளிபரப்பப்படும் வெளிநாட்டு அலைவரிசைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

மேலும் ஒரு வருடத்திற்கு ஒளிபரப்ப அதன் விண்ணப்பம் ஏற்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் ஊடக கட்டுப்பாட்டாளர் சீன அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பாளரான சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கை (சிஜிடிஎன்) இரத்து செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீன அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததில் நாங்கள் ஏமாற்றமடைகிறோம் என்று பிபிசி தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.