Header Ads

சடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம் ! அடுத்து என்ன ?



அடுத்து வரும் 8 நாட்களுக்கு கொரோனா தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவினைச் சொல்லுங்கள் என அதிபர் மக்ரோன், வல்லுனர்களுக்கு தெரிவித்த சில நாட்களுக்குள் கொரோனாவின் தாக்கம் மீளவும் பிரான்சில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக சுகாதாரத்துறைக்கு நெருக்கடியினை கொடுக்கின்ற தீவிர சிகிச்சபை;பிரிவில் சேர்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்றைய நிலைவரப்படி 3 435 பேர் இப்பிரிவில் காணப்படுகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 431 பேர் உயிரிழந்துள்ளனர். 20 064 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் எத்தகைய முடிவினை எடுக்கப் போகின்றது என்பது வரும் நாட்களில் முக்கியமானதாக இருக்கப்போவதோடு, பிராந்தியரீதியான பொதுமுடக்கமே தற்போது அரசாங்கத்தின் கைகளில் காணப்படுகின்றது.
கொரோனாவோடு வாழப்பழகுங்கள் என முன்னராக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், கொரோனாவின் 'புதுப்புதுவடிவம்' வாழப்பழகுவதில் சிக்கலைக் கொடுத்து வருகின்றது என்பதுதான் உண்மை.

No comments

Powered by Blogger.