Header Ads

வேலைத்தளங்கள் ஊடாக கொரோனா தடுப்பூசி !



இவ்வார இறுதியில் வேலைத்தளங்கள் ஊடாக கொரோனா தடுப்பூசி இட்டுக்கொள்ளும் செயல்முறை நடைமுறைக்கு வர இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
50 வயதில் இருந்து 64 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு வழங்கப்பட இருக்கின் தடுப்பூசியானது, (cardiovasculaires, respiratoires, des problèmes d’obésité,) இருதய நோய் உள்ளவர்கள், உடல்பருமன் கொண்டவர்கள், சுவாசப்பிரச்சனை உள்ளவர்களுக்கு முதன்மையாக வழங்கப்பட இருக்கின்றது.
வேலைத்தள நிர்வாகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் தொழில்தள மருத்துவர்கள் (médecine du travail) ஊடாகவோ அல்லது பொதுமருத்துவர்கள் ஊடாகவோ இதனை போட்டுக்கொள்வதற்குரிய ஏற்பாடு செய்யப்படுகின்றது.
ஒவ்வொருவரது சுயவிருப்பத்துக்கு அமையவே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும் என்பது ஒருபுறமிருக்க, வேலைத்தள நிர்வாகத்தினால் இது கட்டாயமாக்கப்பட முடியாது எனக்கூறப்படுகின்றது.
இருப்பின் தமது சுகாதார நிலைமைகளை எடுத்துக்காட்டி வேலைத்தவிர்ப்பில் இருக்கும் தொழிலாளர்களை, நிர்வாகம் கட்டாயப்படுத்தும் நிலை தோன்றலாம் எனக் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.