Header Ads

பிரித்தானியாவில் கொரோனாவால் பலியானவர்களை அடக்கம் செய்வதில் சிக்கல்

 


பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்த உறவினர்களை அடக்கம் செய்ய ஐந்து வாரங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் கொரோனாவால் 30,000 பேர் உயிரிழந்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு மையம் நடத்துவோர் உடல்களை வைக்க இடம் இல்லாமல் போகும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளனர்.

உடல்களை பதப்படுத்தும் வேலையை செய்பவர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களைக் கையாளவேண்டியுள்ளதால், தங்களுக்கு நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்துடனேயே வேலை செய்கிறார்கள்.

பிரித்தானியாவை கொரோனா புரட்டி எடுத்த நிலையில், சென்ற ஆண்டில் மட்டும் அதிகப்படியாக 90,000 இறுதிச்சடங்குகளை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த மாதத்தில் மட்டும் 30,000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியானதால், இறுதிச்சடங்கு மையம் நடத்துவோர் அதிக அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

No comments

Powered by Blogger.