Header Ads

எமது உணர்வு எமது உரிமை - கொட்டும் மழையிலும் கவனஈர்ப்பு போராட்டம்!!!


 எமது உணர்வு எமது உரிமை - பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான கவனஈர்ப்பு போராட்டம் கொட்டும் மழையிலும், அநேக எதிர்ப்பின் மத்தியிலும் இன்று காலை ஆரம்பமாகியது.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழின எதிர்ப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான இப் போராட்டமானது 03.02.2021 முதல் 06.02.2021 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்குகிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தல் மற்றும் அனைத்துவிதமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் முகமாகவும் அகிம்சை முறையிலான இக்கவன ஈர்ப்பு போராட்டம் இன்று ஆரம்பமாகியது.
தொடர்ந்தும் பொதுவில் நோக்கி ....



#P2P பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்ட உத்தேச நேர அட்டவனை – வடமாகாணம்
04.02.2021
4.00 மணி மாலை கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி புறப்படல்
4.30 மணி மாலை - கொகம்பகஸ்; சந்தியில் (நாயாறு)கிழக்கு பவணியை சந்தித்தல்.
5.30 மணி மாலை முல்லைத்தீவு நகரத்தை சென்றடைதல்
இரவு தங்குமிடம் - உணவு -முல்லைத்தீவு
05.02.2021
6.00 மணி – காலை–முல்லைத்தீலிலிருந்து புறப்படல்
7.00 மணி – காலை - வற்றாப்பளை
8.00 மணி – காலை – முள்ளியவலை
9.00 மணி- காலை – ஒட்டுசுட்டான்.
10.00 மணி காலை – நெடுங்கேணி
11.00 மணி காலை – புளியங்குளம்
12.00 மணி மதியம் - வவுனியா நகரம்
02.00 மணி மதியம் - செட்டிக்குளம்
03.00 மணி மாலை – மடு வீதி
04.00 மணி மாலை – முருங்கன்
06.00 மணி மாலை – மன்னார்
காலை உணவு – முல்லைத்தீவு
மதிய உணவு – வவுனியா
இரவு உணவு - மன்னார்
தங்குமிடவசதி, போக்குவரத்து, தொடர்பு.
06.02.2021
6.00 மணி காலை –மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் நோக்கி
7.00 மணி காலை – வெள்ளாங்குளம்
7.30 மணி காலை – துணுக்காய்
8.00 மணி காலை - மாங்குளம்
9.00 மணி காலை – முறிகண்டி
10.00 மணி காலை – கிளிநொச்சி
11.00 மணி மதியம் - பரந்தன்
12.00 மணி மதியம் - பளை
01.00 மணி மதியம் – சாவகச்சேரி
02.00 மணி மாலை – யாழ்ப்பாணம்
03.00 மணி மாலை -நெல்லியடி
4.00 மணி மலை – பொலிகண்டி
காலை உணவு – துணுக்காய்
மதிய உணவு – சாவகச்சேரி
இரவு உணவு - யாழ்ப்பாணம்



No comments

Powered by Blogger.