Header Ads

பிரான்ஸில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று தொடக்கம் உளநல ஆலோசனை சிகிச்சை!!!



குமாரதாஸன்.

பிரான்ஸில் மனப்பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநல மருத்துவ ஆலோசனை வழங்கும் இலவச சேவை ("chèque psy") இன்று பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது.
வைரஸ் நெருக்கடியால் தனித்தும் வருமான வாய்ப்புகள் இழந்தும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக அதிபர் மக்ரோன் அண்மையில் அறிவித்த பல உதவித் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
உள ரீதியாக துன்புறுவதாக உணர்கின்ற மாணவர்கள் எவரும் தங்கள் பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் ஊடாக ஓர் உளவியலாளரையோ மனோவியல் மருத்துவரையோ அணுகி ஆலோசனைகளையும் சிகிச்சைகளை யும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த சேவைக்கான கட்டணங்கள் முழுவதையும் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனம் (Sécurité social) பொறுப்பேற்கும்.
"chèque psy"" எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டம் தொடர்பான விவரங்களை மாணவர்கள் soutien-etudiant.info என்ற இணையத்தளம் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
நீண்ட காலமாக வீடுகள் மற்றும் விடுதிகளில் இருந்தவாறு கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வது மற்றும் தொடர்புகள் இழந்து தனித்து வாழ்தல், வருமான இழப்பு போன்ற சூழ்நிலைகளால் பல்கலைக்கழக மாணவரிடையே உளவியல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

No comments

Powered by Blogger.