Header Ads

மியன்மரில் இராணுவ புரட்சி !! ஆங் சான் சூகி சிறை !!!



 மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் அதிகாரத் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
 
இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
 
இந்தநிலையிலேயே அங்கு இராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
 
இதனால் ஆங் சான் சூகி, இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அத்தோடு, ஆங் சான் சூகி உள்ளிட்ட மேலும் சில தலைவர்களும் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
 
இதனால் தற்போது, அந்நாட்டில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.