கொரோனா தடுப்பூசி பெண் கருவுறுதலை தடுக்கும்…. நிபுணர்கள் விளக்கம்….
கொரோனா தடுப்பூசி பெறும் பெண்களுக்கு கருவுறுதல் பாதிக்கும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
இந்நிலையில் லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் மகப்பேறியல் பேராசிரியரும், மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் செய்தித் தொடர்பாளருமான பேராசிரியர் Lucy Chappell இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
Pfizer தடுப்பூசி பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் அவர்களின் placenta-வை தாக்கக்கூடும் என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவியுள்ளன.
ஆனால் தடுப்பூசி உங்கள் கருவுறுதலை பாதிக்கும் என்பதை நம்பத்தகுந்த உயிரியல் வழிமுறை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி உடலுக்கு ஒரு message-ஐ அனுப்புவதன் மூலம் செயல்படுகிறது.
இது கொரோனா வைரஸின் தனித்துவமான ‘spike-ன்’ சிறிய, பாதிப்பில்லாத ஒரு பகுதியை உருவாக்க அனுமதிக்கிறது.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்பாட்டுக்குத் தூண்டுவால் வைரஸை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குகிறது.
இந்த ‘messenger particles’ மிகக் குறுகிய காலம் தான் உடலில் இருக்கும்.
அவை அவற்றின் message-ஐ வழங்குகின்றன, பின்னர் அவை அழிந்துவிடுகின்றன என பேராசிரியர் Lucy Chappell விளக்கமளித்துள்ளார்.
No comments