Header Ads

தடையை மீறி தீவிரமாக நடைபெறும் பணி: எதிர்ப்பினைத் தெரிவித்த மக்கள்!



வவுனியா உக்குளாங்கும் பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் தொலைத் தொடர்புக் கோபுரம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் பாதுகாப்பற்றதாகவும் காணப்படுவதாக தெரிவித்து அங்கு அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நகரசபையினால் தொலைத் தொடர்புக்கோபுரம் அமைக்கும் பணிக்கு தடை அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது, கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அங்கு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்நடவடிக்கையினைத்தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைப்பதற்கு நகரசபைத்தவிசாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் தற்போதும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் நகரசபையினால், இந் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்படவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், எமது பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்பு கோபுரம் பாதுகாப்பு அற்றதுடன் அச்சுறுத்தலாகவும் காணப்படுவதாக நகரசபையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் இன்றுவரை தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக இடம் பெற்று வருகின்றது. இவ்வாறு இரவு பகலாக அமைக்கப்பட்டு வரும் பணிகளைத்தடுத்து தடுத்து நிறுத்தாமல் கோபுரம் அமைக்கப்பட்டு விட்டது இனி ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவிப்பதற்காகவே இப்பணிகள் அவரசமாக இடம்பெற்று வருகின்றது.

மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு முயன்றபோதிலும் கொரோனாவைக்காரணம்காட்டி பொலிசாரின் தலையீட்டால் மக்களின் ஆர்ப்பாட்டமும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் பணிகளை மேற்கொள்வதற்கு பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம் சம்மதக்கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளதாகவும் உங்குளாங்கும் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்குளாங்குளம் கிராமத்திற்குள் பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம் எவ்வாறு சம்மதம் தெரிவிக்க முடியும் இவ்வாறு இதனை அமைப்பதற்கு பல்வேறு முன்னுக்குப்பின் முரன்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

மக்கள் குடியிருப்புப்பகுதியினுள் இக்கோபுரம் அமைப்பதைத் தடை செய்யுமாறு கோருவதாகவும் இதற்குரிய உடனடிய நடவடிக்கையை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.