பரிஸ் ‘மூன்றுவார கால உள்ளிருப்பு!’
பரிஸ் மாநகரம் மூன்று வார கால உள்ளிருப்பிற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று வியாழக்கிழமை மாலை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இது தொடர்பான கோரிக்கை ஒன்றை அரசிடம் முன் வைத்தார். கொரோனா வைரசிடம் இருந்து பரிசை பாதுகாக்க ‘மூன்றுவார கால உள்ளிருப்பு!’ அவசியமானது என தெரிவித்த ஆன் இதால்கோ, இது தொடர்பான அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’பரிசை முழுமையாக திறக்க இந்த உள்ளிருப்பு அத்தியாவசியமானது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
நேற்றைய பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் இருவரும் மேற்கொண்ட ஊடக சந்திப்பில் ‘20 மாவட்டங்கள்’ தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படுகின்றது என அறிவித்திருந்தனர். இதில் பரிஸ் உட்பட இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.
இருந்த போதும் இந்த 20 மாவட்டங்களுக்கு முழுமையான உள்ளிருப்பு குறித்து அவர்கள் அறிவிக்கவில்லை. இந்நிலையிலேயே ஆன் இதாகோ இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
No comments