க.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்!
2021 மார்ச் மாதம்
01 ஆம் திகதி
தொடக்கம் ஆரம்பமாகவுள்ள
க.பொ.த சாதாரண தரப்
பரீட்சைக்கு தோற்ற
உள்ள இதுவரை
தேசிய அடையாள
அட்டையை பெற்றுக்கொள்ளாத
பரீட்சாத்திகளுக்கு தேசிய
அடையாள அட்டையை
வழங்கும் பணிகளுக்காக
மட்டும் இன்று
(26) ஆட்பதிவு திணைக்களத்தின்
பிரதான அலுவலகம்
உள்ளிட்ட ஏனைய
அலுவலகங்கள் திறந்திருக்கும்.
அதன்படி கொழும்பு பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாகாண அலுவலகங்கள் காலை 08.30 மணி தொடக்கம் பகல் 1.00 மணி வரை திறந்திருக்கும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வீ குணத்திலக்க அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கு மாத்திரம் இந்த விசேட சேவை நடத்தப்படுவதுடன், இதற்காக அதிபர்கள் அல்லது கிராம உத்தியோகத்தர்களினால் உறுதி செய்யப்பட்ட மற்றும் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்ப பத்திரத்துடன் வருமாறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments