மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் மேல்மாகாணத்தில் 50 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 514 தொற்றாளர்களில் 224 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 28 ஆயிரத்து 440 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 759 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 982 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments