உயிரிழப்புக்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத ஊடகங்கள் !
கொரோனா வைரஸ் முதல் பொதுமுடக்க காலத்தில் நாளாந்த உயிரிழப்பு விபரங்கள் உட்பட அதிக கவனம் பெற்றிருந்த சுகாதார அறிக்கை, தற்போதைய காலத்தில் ஊடகங்களில் கவனத்தில் பெரிதாக காணப்படாத நிலை காணப்படுகின்றது.
நாளாந்த புள்ளிவிபரங்கள் பொதுமக்களிடத்தில் உளவியில்ரீதியிலான தாக்கத்தினை ஏற்படுத்தி விடும் என்ற நிலைப்பாடு காணப்படுவதோடு, இயல்புவாழ்க்கையினை பாதித்து விடும் என்ற அச்சம் உள்ளது.
இந்நிலையில் புதிதாக 20 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 320 பேர் உயரிழந்துள்ளனர் என சுகாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் 3 298 பேர் உள்ளடங்க, மொத்தமாக 26 424 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
No comments