Header Ads

பிரான்சில் போர்தோ குண்டு வெடிப்பு !! தீவிரவாத தாக்குதலா ? தீவிர விசாரணை ஆரம்பம்!!

 



இன்று காலை போர்தோ நகர மத்தியில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி வாசகர்களிற்குத் தெரிவித்திருந்தோம்.

 
காலையில் வெடிவிபத்து ஏற்பட்ட கட்டத்தின் இடிபாடுகளிற்குள் தீயணைப்பு மீட்புப் படையினர், தங்களின் மோப்ப நாயுடன் நடாத்திய தேடுதலில், மாலை 16h00 மணியளவில், விபத்தில் கொல்லப்பட்ட  88 வயதுடைய மூதாட்டியின் உடலத்தைக் கண்டடுத்துள்ளனர். படுகாயமடைந்த இந்த மூதாட்டியின் 89 வயதுக் கணவனும் மீட்கப்பட்டுள்ளார்.
 
இடிபாடுகளிற்குள் மேலும் உயிருடன் யாரும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்;லை என, இந்த மீட்புப் பணியைத் தலைமை தாங்கிய தீயணைப்புப் படையின் லெப். கேணல்(lieutenant-colonel) Gironde Philippe Esselin தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஆனாலும் இடிபாடுகளிற்கு இடையில் உயிரற்ற உடலங்கள் எதுவும் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

No comments

Powered by Blogger.