Header Ads

கொரோனா தடுப்பூசி தொழில் நுட்பத்தை பைசர் நிறுவனத்திடம் இருந்து திருட முயன்ற வட கொரியா!



அமெரிக்க பைசர் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி தொழில் நுட்பத்தை வட கொரியா திருட முயன்றதாக தென்கொரியா குறஞ்சாட்டி உள்ளது.

கிழக்கு ஆசியா நாடான வட கொரியா, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசரிடமிருந்து கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட முயன்றதாக தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று வரை வட கொரியாவில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு தரப்பிலிருந்து இதுவரை அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

அதேசமயம், ஆக்ஸ்போர்டு /அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியின் கிட்டத்தட்ட 20 லட்சம் டோஸ்களை பெற வட கொரியா எதிர்பார்த்து இருக்கிறது.

அதுமட்டுமின்றி கோவாக்ஸ் தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் படி, ஆசிய நாடுகள் இந்த ஆண்டின் முதல் பாதியில் தடுப்பூசியின் 1,992,000 டோஸ்களை வட கொரியாவுக்கு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்ப தகவல்களைப் திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசரின் சர்வர்களை ஹேக் செய்ய வட கொரியா முயன்றது என தேசிய புலனாய்வு நிறுவனத்தை மேற்கோள் காட்டி தென் கொரியாவின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற புலனாய்வுக் குழுவின் மூடிய கதவு அமர்வின் போது தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டதுஎன கூறப்பட்டு உள்ளது.

No comments

Powered by Blogger.