போலி கொரோனா தடுப்பூசி - எச்சரிக்கையாக இருங்கள்!'
கொரோனா தடுப்பூசிகளை மையமாக வைத்து பல்வேறு மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பான முதற்கட்ட செய்தியினை நாம் அண்மையில் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், இந்த மோசடிகள் தற்போது இரண்டு மடங்காக அதிகரிதுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Haute-Saône நகரில் வசிக்கும் ஒருவர் அங்குள்ள முதியோர் வசிக்கும் வீடுகளை இலக்கு வைத்து மோசடி செய்துள்ளார். கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை தாமது நிறுவனம் இலவசமாக தருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் கதவினை திறக்கவில்லை எனவும், இது தொடர்பாக காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது.
Pas-de-Calais, Doubs, Gard மற்றும் Vienne ஆகிய நகரங்களில் தொலைபேசியூடாக அழைத்து கொரோனா தடுப்பூசிகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தும் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் சில நூதனமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. Gard மாவட்டத்தில் ஜொந்தாமினர் போன்று போலியான உடை அணிந்து, வீடுகளுக்குள் நுழைந்து 'போலி கொரோனா தடுப்பூசி விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!' என தெரிவித்து அவர்களிடம் இருந்து திருட முற்பட்டுள்ளதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த மோசடிகளிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள எந்த சந்தர்ப்பத்திலும் பணம் செலுத்த தேவையில்லை என அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments