Header Ads

இங்குள்ல அடுக்குமாடி குடியிருப்பு - துண்டிக்கப்பட்ட மனித தலை!!

 



பெட்டி ஒன்றுக்குள் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் Toulon (Var) நகரில்  இடம்பெற்றுள்ளது.  இங்குள்ல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஜன்னலில் இருந்து பெட்டி ஒன்று வீதிக்கு வீசப்பட்டுள்ளது. பெட்டிக்குள்  துண்டிக்கப்பட்ட ஆண் ஒருவரின் தலை இருந்துள்ளது. பின்னர் உடல் முழுவதும் இரத்தக்கறை படிந்திருக்க ஜன்னலில் ஒருவர் காட்சியளித்துள்ளார். 
 
இந்த கோர சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். RAiD அதிரடிப்படையினர் உட்பட பயங்கரவாத தடுப்புப்பிரிவினரும் அழைக்கப்பட்டனர். 
 
இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதல் இல்லை என முதலில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் சந்தேகத்துக்கு இடமான வீடற்ற நபர் (SDF) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டவரும் வயதுடைய வீடற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.