Header Ads

பால்மா இறக்குமதி நான்கு ஆண்டுகளில் நிறுத்தப்படும் – விவசாய அமைச்சர்



பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த அடுத்த 04 ஆண்டுகளில் பால்மாக்களின் இறக்குமதி நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒரு நாளைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கால்நடை வளர்ப்பிற்கு என 1.5 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கறவை பசுக்களின் எண்ணிக்கை 500,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

அதேநேரம் பச்சை பயறு, கம்சன், எள் மற்றும் கௌப்பி இறக்குமதி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.