Header Ads

அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும்!



கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.தற்பொழுது பயன்படுத்தப்படும் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களினால் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம்  கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மக்களுள் பெரும்பான்மையினர் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டால்தான் கொரோனா தடுப்புக்கான தமது திட்டத்தை வெற்றிக்கொள்ள முடியும் என்றும் சிலர் இந்த திட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதை தாம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் பெருமளவில் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. 

இதுவரை 250,000 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றப்பட்டோர் மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தகவல்கள் எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக இவ்வாறான தடுப்பூசி ஏற்றும்போது சிறியளவிலான பக்கவிளைவு ஏற்படக்கூடும். இது வழமையான ஒன்று. மக்களுள் பெரும்பாலானோர் இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்டால்தான் இத்திட்டத்தை வெற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.