அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல்…. 3 பேர் பலி
அமெரிக்காவின் வடக்கு கரோலினா கடற்கரையோர பகுதியில் உள்ள Brunswick Countyயில் பாரிய சூறாவளி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
அதில் 3பேர் உயிரிழந்தனர் மேலும் 10பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சூறாவளியால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதில் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
மீட்பு படையினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் தற்போது பல இடங்களில் பனி கொட்டி வரும் நிலையில் வடக்கு கரோலினாவில் சூறாவளி தாக்கி சேதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments