Header Ads

பிரான்சில் பாடசாலைகளை உடனடியாக நான்கு வாரங்களிற்கு மூடும்படி எச்சரித்துள்ளனர்

 மாணவர்களிற்கான வைத்தியர்களின் சம்மேளனம் (médecins scolaires), பாடசாலைகளை உடனடியாக நான்கு வாரங்களிற்கு மூடும்படி எச்சரித்துள்ளனர்


பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களிற்கான மருத்துவர்களின் தொழிற்சங்கங்களான SNMSU-Unsa éducation ஆகியவையும் இணைந்தே, அரசாங்கத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.



பாடசாலைகளில் பிரித்தானிய வைரசும், தென்னாபிரிக்க வைரசும் பரவ ஆரம்பித்திருப்பதால் பெப்ரவரி விடுமுறையுடன் சேர்த்து அனைத்து மாணவர்களிற்கும் நான்கு வார விடுமுறையை வழங்குமாறும், இதனால் மட்டுமே தொற்றைத் தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இப்போது நான்கு வாரங்கள் மூடாவிட்டால், மார்ச் மாதத்திற்கு முதல், நாடு பெரும் உள்ளிருப்பிற்குள் செல்லும் போது, நீண்ட காலம் பாடசாலைகளையும் மூட வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.