மன்னாரில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிற்கான இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு!
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பிற்கான இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு மன்னார் பிரதேச செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றுள்ளது.
சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி குறைந்த புள்ளிகளை பெற்றுக்கொண்டவர்களில் ஒரு இலட்சம் பேரை அரச வேலைவாய்ப்பிற்குள் இணைத்துக்கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு லட்ஷம் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி மன்னாரில் முதற்கட்டமாக 43 பேர் தெரிவு செய்யப்பட்டு, இவர்களுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்று அரச வேளைவாய்பிற்குள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments