Header Ads

க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அதிபர் மீது தாக்குதல்!



நாளை ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற அதிபர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நேற்று சனிக்கிழமை இரவு பொகவந்தலாவை பிரதேசத்திலுள்ள ஒரு தோட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அத்தோடு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற போது தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து தாக்குதல் நடத்தியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் ஒழுக்கம் மீறியமையினால் தண்டித்த காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

னினும் குறித்த மாணவனின் தாயாரும் அதிபர் தன்னை தாக்கியதாக கூறி பொகவந்தலாவை பொலிசாரிடம் புகாரளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.