மூன்றாவது பொதுமுடக்கம் தொடர்பில் இன்று பிரதமர் என்ன சொன்னார் ?
இன்று வியாழக்கிழமை ஊடக மாநாடொன்றினை நடாத்திய பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ், கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பில் அரசாங்கம் எடுத்துவரும் முன்னெடுப்புகள் தொடர்பில் விளக்கியிருந்ததோடு, முழுமையான பொதுமுடக்கம் தொடர்பான நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனவரி 8ம் தேதி 3.3 வீதமாக காணப்பட்ட உருமாறிய பிரித்தானிய வைரஸ், இன்றைய தேதியில் 14 வீதமாக பரவியுள்ளதென தெரிவித்த பிரதமர், கடைப்பிக்கப்பட்டு வரும் சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக மூன்றாவது பொதுமுடக்கத்துக்கான நிலைமை தற்போது காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
உருமாறிய பிரித்தானிய வைரசைவிட இன்னும் வீரியம் கொண்டது என கணிக்கப்பட்ட உருமாறிய பிறேசில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நாளொன்றுக்கு, அண்ணளவாக 20 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதோடு, 1 600 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 320 பேர் உயிரிழக்கின்றனர். 10க்கு 6 பேர் வீதம் தீவிர சிகிச்சபை; பிரிவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிபரங்களை அடுக்கிய பிரதமர், மற்றைய ஐரோப்பிய நாடுகளை விட பிரான்சில் இறப்பு வீதம் குறைவாக காணப்படுகின்றது என ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
1.618 மில்லியன் பேர் முதலாவது கொரோனா தடுப்புசியினை பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ள பிரதமர், நாளொன்று 1 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்குவது என்பது அரசாங்கத்தின் இலக்கென்றார்.
இதேவேளை வருகின்ற பாடசாலை விடுமுறைக்காலத்தில் வெளிச்செல்லபவர்கள், அவதானத்துடன் விடுமுறையினை கடக்குமாறு கோரியதோடு, கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது இவ்வாற்றிருக்க, உருமாறிய மூன்றாவது பிரித்தானிய வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதென்ற செய்தியும் வெளிவந்துள்ளதோடு, இது தடுப்பூசிக்கு கட்டுப்படுமா என்ற கேள்வி ஆராய்சியாளர்கள் நோக்கி நிற்கின்றது.
No comments