Header Ads

1.9 மில்லியன் ஊரடங்குக் கட்டுப்பாட்டுச் சோதனைகள் - உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன்



இன்றைய ஊடகச் சந்திப்பில் பிரதமருடன் பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் கலந்து கொண்டு அறிவித்தல்களை வெளியிட்டுள்ளார்.
 
«ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து, கடந்த வார இறுதியில் இருந்து 39% ஊரடங்குக் கட்டப்பாட்டுச் சோதனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஊரடங்குமீறல்களும் அவர்களிற்கான அபராதங்களும் 53% அதிகரித்துள்ளது»
 
«கடந்த டிசம்பர் 15ம் திகதியிலிருந்து, 1.9 மில்லியன் ஊரடங்குக் கட்டுப்பாட்டுச் சோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது. இதில் 177.000 
அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன»
 
«எல்லைகளில், விமானங்கள், கப்பல்கள், மற்றும் தொடருந்துகள் மூலம் பிரான்சிற்குள் நுழைபவர்களின் அத்தியாவசியக் காரணங்கள் மற்றும் கொரோனாச் சோதனைகள் எல்லைப் பாதுகாப்புப் படையினராலும் காவற்துறையினராலும், ஜோந்தார்மினராலும் கடுமையாகச் சோதிக்கப்படுகின்றது. அத்தியாவசியமற்ற காரணங்களிற்காக உள் நுழைபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்»
 
«கடந்த வெள்ளிக்கிழைமையில் இருந்து விமானவழியில் நுழைந்த 48 பேர், பிரான்சிற்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்»
 
«தரைவழியில் வருபவர்கள் சோதனை செய்யப்பட்டு, அத்தியாவசியமற்று நுழைந்தால் தனிமைப்படுத்தப்படவோ அல்லது திருப்பியனுப்படவோ உள்ளனர்»
 

என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.