இலங்கையில் தொடர்மாடியிலிருந்து விழுந்து பலியாகிய இளம்பெண்…..
இலங்கையில் மாதாம்பிட்டி – ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பில் ஆறாம் மாடியிலிருந்து வீழ்ந்து யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு மாதாம்பிட்டி – ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பு தொகுதியின் ஆறாம் மாடியில் வசித்து வந்த யுவதியொருவரே இன்று புதன்கிழமை காலை 3 மணியளவில் இவ்வாறு வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த 27 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், தற்கொலைச் செய்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகிகம் எழுந்துள்ளது.
பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments