பிரித்தானியாவில் பரவக்கூடிய பல உருமாறிய வைரஸ்கள்! மருத்துவ அதிகாரி எச்சரிக்கை
பிரித்தானியாவில் சர்வதேச பயணங்கள் செய்யாத 11 பேருக்கு தென் ஆபிரிக்கா கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தென் ஆபிரிக்கா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய 8 பகுதிகளில் வீட்டிற்கு வீடு கொரோனா சோதனை மேற்கொள்ளும் திட்டத்தை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அமுல் வைத்திருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் துணை தலைமை மருத்துவ அதிகாரியும் பேராசிரியருமான Gina Radford தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் முன்னேற்றம் அடையும் போது மேலும் பல உருமாறிய வைரஸை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.
அதனால் இதை நாம் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என Gina Radford தெரிவித்துள்ளார்.
No comments