தாயை கொன்று இறுதிச் சடங்கில் கோழி கறி சமைத்து பரபரப்பை ஏற்படுத்திய மகன்
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரதான் சாய் எனும் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், 60 வயதான தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் தாயை கொன்று, வீட்டு வாசலில் சடலத்தினை எரியூட்டியுள்ளார்.
இந்த இறுதிச் சடங்கு தீயில் கோழி கறியை அவர் சமைத்ததாக அண்டை வீட்டினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரதான் சாய் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் தொடர்ந்து தனது தாயுடன் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தாய் சுமி சாய், மகனை குடிபோதையில் வீட்டு வர வேண்டாம் என்று கராராக கூறியுள்ளார். இந்நிலையில் இருவருக்குமான வாக்குவாதமானது வன்முறையாக மாறியுள்ளது. இதில் பிரதான் சாய், சுமி சாயை கட்டையை கொண்டு தாக்கியதில் சுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரதான் தனது தாயின் சடலத்தினை வீட்டு வாசலில் எரியூட்டியுள்ளார். தொடர்ந்து, எரியும் தீயில் கோழி கறியை சமைத்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் பிரதானின் சகோதரியும் அருகில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து அண்டை வீட்டினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments