Header Ads

பிரான்சில் அதிகரி்துள்ள சிறுவர் துஸ்பிரயோகங்கள்… அதிர்ச்சி தகவல்

 


பிரான்ஸில் சிறுவர்கள் மீதான ஓன்லைன் பாலியல் துன்புறுத்தல்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிரான்சில் கொரோனா தொற்றுநோயால் இணையதளத்தை அதிக நேரம் பயன்படுத்தும் சிறுவர் சிறுமிகளுக்கு ஓன்லைன் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது.

14 முதல் 16 வயதுடைய இளம் பெண்களை நோக்கி பாலியல் ரீதியான மிரட்டல்களும் துன்புறுத்தல்களும் குறிவைக்கப்படுவதாக E-enfance எனும் குழந்தைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது .

பதின்ம வயது பெண்களுக்கு ஆபாசமான படங்களை அனுப்புவது, அவர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றிய புகைப்படங்களை எடுத்து ஆபாச தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவது, பணம் பறிப்பது அல்லது பாலியல் தொல்லைகள் கொடுப்பது போன்ற ‘Sextortion’ குற்றங்கள் 57 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலான இளம் ஆண்கள் Revenge Porn எனப்படும் தங்கள் முன்னாள் காதலியை, அவர்களுடன் நெருக்கமான நேரங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கொண்டு மிரட்டுகின்றனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக 14 முதல் 16 வயது மிக்க சிறுமிகள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Webcam blackmail என்பது ஒருவரை மிரட்டி ஒன்லைனில் Webcam முன்னிலையில் வற்புறுத்தி ஆடைகளை கழட்ட வைத்து, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதாகும்.

இந்த குற்றங்களில் ஈடுப்படுபவர்களை கண்டுப்பிடிப்பதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.