Header Ads

கொரோனா தடுப்பூசி பெறுபவர்களுக்கு ஐஸ் கிரீம் வழங்கும் நாடு

 


கொரோனா தொற்று பாதிப்பால், 2020ம் ஆண்டில் உலக நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த தொற்றில் இருந்து விடுபடும் பொருட்டு, தடுப்பூசி முகாம்களை அதிகளவில் நடத்தி வருகின்றன.

எனினும், மக்களுக்கு இந்த தடுப்பூசியின் மீது போதிய நம்பிக்கை ஏற்படாததால்,தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

ரக்ஷ்யாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தயக்கத்தை போக்குவதற்கும், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தின் மால் ஒன்றில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, ஐஸ்கிரீம் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு குறைந்தது 300 பேருக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மட்டும் வெறும் 35 பேர் மட்டுமே வந்து இருந்தனர்.

ரஷ்ய மக்கள் தொகையில், 38 சதவீதத்தினர் மட்டுமே, இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவிலான மாபெரும் தடுப்பூசி திட்டம், விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.