இதுவரை மொத்தமாக 3,686,813 பேருக்கு தொற்று !!!
வியாழக்கிழமை மாலை வரையான நிலவரப்படி, 25,403 பேருக்கு ஒரே நாளில் தொற்று ஏற்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை மொத்தமாக 3,686,813 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று வீதம் படிப்படியாக உயர்ந்து தற்போது 6.9% வீதமாக உள்ளதுய். கடந்த வாரத்தில் 5.6% வீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 நாட்களில் 9.400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.845 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
261 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 85.608 பேர் சாவடைந்துள்ளனர். அவர்களில் 61.007 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.
No comments