Header Ads

பிரான்சின் புதிய முயற்சி !! தொலைபேசி செயலி (App) மூலம் கொரோனா பரிசோதனை!!!

 


தொலைபேசி மூலம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் முயற்சியில் களமிறங்கியுள்ளது பிரான்ஸ். 

 
Lille நகர ஆராய்ச்சியாளர்கள் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். உங்கள் தொலைபேசியில் சிறிய கருவி ஒன்றை பொருத்துவதன் மூலம் அதற்கென தயாரிக்கப்பட்ட செயலி (App) இயங்க ஆரம்பிக்கும். பின்னர் உங்கள் 'சளி' மாதிரியினை அந்த கருவியில் வைப்பதன் மூலம் அதன் அணுக்களை ஆராய்ந்து உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை இந்த செயலியே சொல்லி விடும். 
 
இதற்கு உள்ளூர் மருந்தகங்களுக்குச் சென்று நீங்கள் இந்த கருவியினை வாங்கி தொலைபேசியின் மின்னேற்றும் பகுதியூடாக இணைத்தால் போதுமானது. 
 
இந்த பரிசோதனையின் முடிவுகள், PCR முடிவுகளில் கிட்டத்தட்ட 90% வீதமானவையுடன் பொருந்திச் செல்கின்றன. 
 
இந்த கருவி தற்போது வரை ஆய்வுகூடத்தில் பரிசோதனையில் உள்ளது. வேகமாக இடம்பெற்று வரும் இந்த கருவி தயாரிப்பு வெற்றியளித்தால் பொதுமக்களுக்கு கிடைக்கும் வழி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
<<மின் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தோடு நாம் ஒப்பந்தம் பேசி வருகின்றோம்!>> என ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

No comments

Powered by Blogger.