Header Ads

யாழில் கைதி, ஆசிரியை உட்பட 6 பேருக்கு கொரோனா!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் (21) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கு, யாழ் மாவட்டத்தில் 2 பேருக்கு, கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கு என ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி – பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதியானது.

தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியையின் வீட்டில் அண்மையில் திருகோணமலையில் இருந்து உறவினர்கள் வந்து தங்கியிருந்துள்ளனர்.

இவ்வாறு தங்கியிருந்த உறவினர்கள் திருகோணமலைக்கு திரும்பிய நிலையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இத்தகவல் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, குறித்த ஆசிரியை குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அத்துடன் பெறப்பட்ட மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே ஆசிரியைக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – கரைச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் இருவரும் கொழும்பு சென்று திரும்பியவர்கள்.

மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கரைச்சி ஆடைத் தொழிற்சாலையில் கண்டறியப்பட்ட பணியாளருடன் நேரத் தொடர்புடையவர்” என்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.