நாட்டில் மேலும் 254 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 79 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 843 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 299 ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, அவர்களில், இன்னும் ஐயாயிரம் பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை 435 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments