பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் -பிரதமர்
அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் Jean Castex சற்று முன் இதனை அறிவித்திருந்தார். <<முன் பதிவுகள் செய்யப்பட்டுள்ள 1.7 மில்லியன் பேருக்கான தடுப்பூசிகள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை 500.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன!>>
பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இலக்கை நோக்கி அரசு பயணிப்பதாக தெரிவித்த பிரதமர், தற்போது நாள் ஒன்றுக்கு 100.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படு வருவதாகவும் தெரிவித்தார்.
No comments