Header Ads

இல்-து-பிரான்சில் ஆபத்தின் விளிம்பில் வைத்தியசாலைகள்





பிரான்சில் 404 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (04.02.2021 சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 56 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 13.591  ஆக உயர்ந்துள்ளது.
 
இங்கு 5.470 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தீவிரசிகிச்சைப் பிரிவில் 727 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 63% ஆகும்.
 
100.000 பேரிற்கான கொரோனாத் தொற்று விகிதம் ( taux d'incidence) இல்-து-பிரான்சில் 231 ஆக உள்ளது. (200 இற்கு மேல் ஆபத்தான நிலைமையாகும்).
 
 
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
 
    Paris - வைத்தியசாலையில்  855 பேர் -   2.944 பேர் சாவு  (+6)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில்  753 பேர் - 1.653 பேர் சாவு (+10) 
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் 638 பேர் - 2.058 பேர் சாவு (+8) 
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் 929 பேர் -  1.822 பேர் சாவு (+11) 
    Les Yvelines- வைத்தியசாலையில்  672 பேர் - 1.242 பேர் சாவு (+5)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில்  446 பேர் - 1.324 பேர் சாவு (0)
    L'Essonne- வைத்தியசாலையில்  743 -  1.2112 பேர் சாவு (+13)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில்  422 பேர் -  1.336 பேர் சாவு (+3)


No comments

Powered by Blogger.