உடனடியாக அரசாங்கம் உள்ளிருப்பை அறிவிக்கும் - பிரதமர்
«நாட்டில் கொரோனத் தொற்று மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது. ஆனால் நாளாந்தம் கொரோனாத் தொற்று சராசரியாக 20.000 இலிருந்து 23.000 ஆகவே உள்ளது.
அதனால் உள்ளிருப்பிற்கு இன்னமும் எங்களிற்கான அவகாசம் உள்ளது» என இன்றைய தொலைக்காட்சிச் செவ்வி மற்றும் ஊடகச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
«இன்று உள்ளிருப்பிற்கான அவசியம் இல்லாவிட்டாலும் தற்போதைய நிலை மோசமடைந்தால் எந்தத் தாமதங்களும் இன்றி உடனடியாக அரசாங்கம் உள்ளிருப்பை அறிவிக்கும்»
«அப்படி அறிவிக்கப்பட்டால் அது மாரச் மாதம் போல் அத்தியாவசியமற்ற வரத்தக நிலையங்கள் மூடப்பட்டு, பாடசாலைகளும் மூடப்படும்»
«நாளை பிரான்சின் முதல் வலயத்திற்கு பாடசாலை விடுமுறை ஆரம்பிக்கும் நிலையில், பிரான்சிற்குள் ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றைய பிராந்தியத்திற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை» எனவும் மிகவும் அவதானத்துடன் நடக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
«இணையவழி வேலையான Télétravail ஊக்குவிக்கப்பட்டுள்ளது.»
«தற்போதைக்கு பாடசாலை விடுமுறைகளில் எந்நத மாற்றங்களும் இல்லை» எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments