Header Ads

கடும் குளிருக்கு மத்தியில் பாரிஸ் 11 இல் தீ அனர்த்தம் இருவர் பலி! பலர் காயம்!!



பாரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் Boulevard Voltaire இல் அமைந்துள்ள மாடிக் குடியிருப்பில் இன்று விடிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஆறு மாடிகள் கொண்ட குடியிருப்பின் ஐந்தாவது தளத்தில் அதிகாலை நான்கு மணி அளவில் தீ பரவியது.பெரும் எண்ணிக்கையான தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பலத்த எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட நால்வரில் இருவர் உயிரிழந்தனர் என்றும் ஏனைய இருவரும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் எனவும் முதலில் வெளியாகிய செய்திகள் தெரிவித்தன.
தீயணைப்புப் பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படாதிருக்க Boulevard Voltaire தெரு இன்று காலை சில மணி நேரம் மூடப்பட்டிருந்தது. தீ பரவியமைக்கான காரணம் தெரியவரவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(படம் :les Pompiers de ParisTwitter screenshot)

No comments

Powered by Blogger.