Header Ads

உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பில் WHO வெளியிட்ட தகவல்

 


பிரித்தானிய தலைநகரான லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தற்போது 41 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது.

இத்தகவலை உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட VOC-202012/01 உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ஆறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியங்களில் ஐந்தில் உள்ள 40 பிற நாடுகளில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட 501Y.V2 உருமாறிய மற்றுமொரு கொரோனா வைரஸ் ஆறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றால் பல்வேறு பல நாடுகளும் பிரித்தானியாவுக்கான பயணங்களை இடைநிறுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள புதிய வகை கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.