மோசடி குறுந்தகவல் தொடர்பில் பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அரசு
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தொடர்பான மெசேஜ்கள் விவகாரத்தில் பிரித்தானியாவில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருவதால் நாட்டில் மூன்றாவது முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பில் நடக்கும் டிஜிட்டல் மோசடி குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சரிபார்ப்பு நோக்கங்களுக்கு என கூறி வங்கி விவரங்களை கேட்கும் போலி என்ஹெச்எஸ் வலைத்தளங்களுக்கான இணைப்புகளுடன் கொரோனா தடுப்பூசிக்கு விண்ணப்பிக்க வேண்டி மோசடி மெசேஜ்கள் மக்களுக்கு அனுப்பப்படுவதாக The Chartered Trading Standards Institute (CTSI) தெரிவித்துள்ளது.
இத்தகைய மோசடி குறுந்தகவல்கள் டிசம்பர் இறுதியில் ஸ்காட்லாந்தின் மேற்கு தீவுகளில் அனுப்பப்பட்டன.
இந்த மேசேஜ்கள் எந்த வகையிலும் குறிப்பிட்ட பிராந்தியத்தை மட்டும் குறிவைக்கவில்லை CTSI தெரிவித்துள்ளது.
No comments