Header Ads

பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பரபரப்பு! அவசர நிலை பிரகடனம்

 பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து திடீரென 700 பேர் வெளியேற்றம்! அவசர நிலை பிரகடனம்: என்ன நடந்தது?

பிரித்தானியாவில் Crawley பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 



இருந்த 700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜனவரி 6, புதன்கிழமை அதிகாலை 12.21 மணியளவில் ஒரு குறிப்பிடத்தக்க எரிவாயு கசிவு ஏற்பட்டது என Sussex பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து Crawley-ல் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிந்த பின்னர் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

West Sussex தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை சம்பவியடத்திற்கு விரைந்து 700 பேரை உடனடியாக வெளியேற்றினர்.

அப்பகுதி பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும் வரை இருக்கும் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.